சலுகை விலையில் எஸ்ஐஏ, ஸ்கூட் விமானப் பயணச்சீட்டுகள்

வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி, 170,000க்கும் அதிகமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) பயணங்களுக்கும் 200,000 ஸ்கூட் பயணங்களுக்குமான விமானப் பயணச்சீட்டுகள் சலுகை விலையில் விற்கப்படவுள்ளன.

எதிர்வரும் ‘டைம் டு ஃபிளை’ சுற்றுப்பயணக் கண்காட்சியின் ஒரு பகுதியாக அந்த விலைக்கழிவை வழங்குவதாய் எஸ்ஐஏ கூறியது.

சலுகை விலையிலான விமானச் சீட்டுகளை நவம்பர் 3-5 வரை சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மண்டபங்கள் 405, 406இல் நடைபெறவிருக்கும் எஸ்ஐஏ நிகழ்ச்சி ஒன்றில் வாங்கிக்கொள்ளலாம்.

அத்துடன், நவம்பர் 3-16 வரை எஸ்ஐஏ இணையத்தளம், கைப்பேசிச் செயலி வழியாகவும் எஸ்ஐஏ நியமித்த பயண முகவர்கள் மூலமும் பயணச்சீட்டுகளை வாங்கலாம்.

இந்நிலையில், இவ்வாண்டு நவம்பருக்கும் அடுத்த ஆண்டு அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில், 50 இடங்களுக்கும்மேல் பயணம் செய்வதற்கு ஸ்கூட் நிறுவனம் சலுகை விலையில் பயணச்சீட்டுகளை வழங்கும்.

கோலாலம்பூருக்கான விமானக் கட்டணங்கள் $68லிருந்தும், தைவானுக்கான பயணக் கட்டணங்கள் $140லிருந்தும் தொடங்கும் என்று ஸ்கூட் கூறியது.

அக்டோபர் 31ஆம் தேதி ஸ்கூட் இணையத்தளத்தில் மேல் விவரங்கள் வெளியிடப்படும்.

எஸ்ஐஏ நிறுவனத்தைப் போலவே, அந்தப் பயணச் சலுகைகள் இவ்வாண்டு நவம்பர் 3 முதல்16 வரை ஸ்கூட் இணையத்தளம் வழியாக வழங்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!