தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ‘கோங் சா’ கடைகள் நிரந்தரமாக மூடல்

1 mins read
a9a42996-3a74-4ef1-b534-7cfdc8524af1
வியாழக்கிழமை (அக்டோபர் 2) நெக்ஸ் கடைத்தொகுதியில் மூடப்பட்டிருந்த ‘கோங் சா’ கிளை. - படம்: சாவ்பாவ்

பபிள் டீ பானம் விற்கும் கடையான ‘கோங் சா’ சிங்கப்பூரில் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டுள்ளது.

‘கோங் சா சிங்கப்பூர்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான காங் புவாய் செங் இதனை சாவ்பாவிடம் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். புதன்கிழமை (அக்டோபர் 1) முதல் சிங்கப்பூரில் ‘கோங் சா’ கிளைகள் செயல்படாது என்று அவர் தெரிவித்தார்.

‘கோங் சா’வின் சிங்கப்பூர் சமூக ஊடகக் கணக்குகள், இணையத்தளம் ஆகியவையும் மூடப்பட்டதாக வியாழக்கிழமை (அக்டோபர் 2) முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘கோங் சா’வின் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் பக்கங்கள் செயல்பாட்டில் இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்து வந்தது.

அதன் இணையத்தளமும் செயல்பாட்டில் இல்லாததும் தெரிந்தது. கிராப்ஃபூட், ஃபூட்பாண்டா உணவு விநியோகத் தளங்களில் ‘கோங் சா’வின் பல கடைகள் மூடப்பட்டுள்ளதாக அல்லது அவற்றிலிருந்து தற்போது உணவு வாங்க முடியாது என்று காண்பிக்கப்பட்டது.

எனினும், அந்நிறுவனத்தின் அனைத்துலக இணையத்தளத்தில் சிங்கப்பூரில் அதன் பல கிளைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் காட்டப்பட்டது. ஆனால், திறப்பு நேரம் குறித்த மேல்விவரம் ஏதும் இல்லை.

பிரிட்டனில் ‘கோங் சா’வின், நட்டத்தை ஏற்படுத்திவரும் 2பி (2B) கிளைகளை மூடப்போவதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. ‘கோங் சா’வின் உரிமையாளர் நிறுவனமான எஸ்டி குரூப் ஃபூட் அவ்வாறு அறிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்