தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரியா செல்ல 2025 இறுதி வரை சிங்கப்பூரர்களுக்கு மின்னணுப் பயண அனுமதி தேவையில்லை

2 mins read
ddcdf4ff-23e6-43c5-a674-077b872206c8
கொரிய மின்னணுப் பயண அனுமதி அல்லது கே-ஈடிஏ என்று அழைக்கப்படும், முன்கூட்டியே பயண அனுமதி என்பது விசா தேவையில்லாத நாடுகள், ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற வட்டாரங்களிலிருந்து வரும் பயணிகளுக்கான நுழைவு அனுமதியாகும். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூர் உட்பட 22 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தென்கொரியா செல்ல 2025 டிசம்பர் 31 வரை மின்னணுப் பயண அனுமதி (ETA) தேவையில்லை.

கொரிய மின்னணுப் பயண அனுமதி அல்லது கே-ஈடிஏ என்பது முன்கூட்டியே பெறும் பயண அனுமதியாகும்.

இது விசா தேவையில்லாத நாடுகள், ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற வட்டாரங்களிலிருந்து வரும் பயணிகளுக்கான நுழைவு அனுமதியாகும்.

கே-ஈடிஏ இணையத்தளத்தில் டிசம்பர் 11 தேதியிட்ட அறிவிப்பின்படி, “பயணத் துறையை ஊக்குவிக்கும்” பொருட்டு, விலக்குக்கான இறுதி நாள் 2024 டிசம்பர் 31இலிருந்து 2025 இறுதிக்கு ஓராண்டு காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கே-ஈடிஏ பெற ஒருவருக்கான கட்டணம் 10,000 வோன் ($9.30 சிங்கப்பூர் வெள்ளி). விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 24 மணி நேரத்துக்கு முன்னர் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

முன்னதாக, டிசம்பர் மாதத்தில், தென் கொரிய கலாசார அமைச்சர் யூ இன்-சோன், குறுகிய காலம் நடப்பிலிருந்த ராணுவச் சட்டத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து 2025ல் சுற்றுப் பயணிகளின் வருகை குறையக்கூடும் என்ற கவலை இருப்பதாக புளூம்பெர்க் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். கொரியாவுக்கு தொடர்ந்து வருகை தருமாறு அவர் மக்களை ஊக்குவித்தார்.

ஒரே கடப்பிதழைப் பயன்படுத்தி பெறப்படும் கே-ஈடிஏ மூன்று ஆண்டுகளில் பல பயணங்களுக்குச் செல்லுபடியாகும்.

விசா போலன்றி, இடிஏ குறுகிய கால வருகைக்கானது. பொதுவாக, விண்ணப்பிக்க எளிதானது.

கடந்த 2023 அக்டோபரில் சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்குமிடையே கிட்டத்தட்ட 209,000 பயணிகள் பயணம் செய்தனர். இது 2019 அக்டோபரில் 153,000 ஆக இருந்தது என்று நவம்பர் மாதத்தில் சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023ன் முதல் 10 மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையே 1.8 மில்லியன் பயணிகள் பயணம் செய்தனர். 2019ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தைவிட இந்த எண்ணிக்கை 1.32 மில்லியன் அதிகம்.

குறிப்புச் சொற்கள்