இஸ்தானாவில் அதிபர் தர்மன் வரவேற்பு

தேசிய தின அணிவகுப்பில் அண்டைநாட்டுப் பிரமுகர்கள்

1 mins read
d54b15ba-3e08-4b92-8545-d71525d70c32
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், புருணை சுல்தான் ஹாஜி ஹச­னல் போல்­கியாவை இஸ்தானாவில் வரவேற்றார். - படம்: தர்மன் சண்முகரத்னம் / ஃபேஸ்புக்

சிங்கப்பூரின் 60வது தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்ள புருணை, இந்தோனீசியா, மலேசியா ஆகிய அண்டை நாடுகளிலிருந்து உயர் பிரமுகர்கள் வருகை அளித்துள்ளனர்.

அதிபர் தர்மன் சண்முரத்னம், அவர்களை வரவேற்கும் பதிவைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புருணை சுல்தான் ஹாஜி ஹச­னல் போல்­கியா, இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி ஆகியோர் பாடாங்கிற்கு வருகையளித்துள்ளனர்.

புருணை சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவையும் மலேசியத் துணைப் பிரதமர் ஸாஹிட்டையும் இஸ்தானாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார் திரு தர்மன்.

மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி (வலது) உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை இஸ்தானாவில் அதிபர் தர்மன் சந்தித்துப் பேசினார்.
மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி (வலது) உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை இஸ்தானாவில் அதிபர் தர்மன் சந்தித்துப் பேசினார். - படம்: தர்மன் சண்முகரத்னம்/ஃபேஸ்புக்

“சிறப்பு நண்பர்களுடனான நமது உறவு ஆழமானது,” என்ற அதிபர் தர்மன், குழப்பம் நிறைந்த உலகில் அது ஒரு வரப்பிரசாதம் என்றார். அதை ஒவ்வொரு தலைமுறையின்போதும் தொடர்ந்து வளர்க்கவேண்டும் என்றார் அவர்.

நெருங்கிய, நீண்டகாலப் பங்காளிகளைத் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும்படி கடைசியாக சிங்கப்பூர் அழைப்பு விடுத்திருந்தது 2019ஆம் ஆண்டில். அப்போது நவீன சிங்கப்பூர் கட்டியெழுப்பப்பட்டு 200 ஆண்டு நிறைவு அனுசரிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்