தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் அதிபர் ஹலிமாவைச் சந்தித்த ‘சிறப்பு விருந்தினர்’

1 mins read
35d06a84-50bf-40e0-8b61-ac6daab3d0b0
திருவாட்டி ஹலிமாவின் முன்னாள் பாதுகாவல் அதிகாரி திருவாட்டி லிம் அவருடன் இணைந்து மெதுநடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப்பிற்கு இன்று (ஜூன் 1) சமூக நிகழ்ச்சி ஒன்றில் இன்ப அதிர்ச்சி கிடைத்தது. அவரை ஒரு சிறப்பு விருந்தினர் சந்தித்தார்.

அமைதி, செழிப்பு சிங்கப்பூரா எஸ்ஜி60 மெதுநடை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருவாட்டி ஹலிமாவை அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான திருவாட்டி லிம் ஹுவீ யி சந்தித்தார்.

“அவரைச் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்றைய மெதுநடையில் என்னுடன் அவர் நடந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் திருவாட்டி ஹலிமா.

27 வயது திருவாட்டி லிம், முன்னாள் அதிபருடன் மெதுநடையில் நடக்கும்படி ஏற்பாட்டாளர்கள் தம்மை அணுகியதாகச் சொன்னார்.

“நான் ஆர்வமாக இருந்தேன், ஏனென்றால் திருவாட்டி ஹலிமாவை நான் மறுபடியும் பார்க்க முடியும். கடந்த ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு திருவாட்டி ஹலிமா என்னைத் தமது இல்லத்திற்கு அழைத்தபோதுதான் கடைசியாக அவரை நேரில் பார்த்தேன்,” என்று திருவாட்டி லிம் கூறினார்.

ஒன் பொங்கோல் உணவங்காடி நிலையத்தில் உள்ள பெற்றோரின் சீனக் கஞ்சி விற்கும் கடையில் வேலை செய்வதற்காக கடந்த ஆண்டு மே மாதம் திருவாட்டி லிம் பாதுகாவல் அதிகாரி பதவியைக் கைவிட்டார்.

திருவாட்டி லிம்மிடம் அவரது கடையைப் பற்றி விசாரித்ததாக சொன்ன திருவாட்டி ஹலிமா, “அவர் பெற்றோருக்கு ஆதரவாகவும் நன்றாகவும் இருக்கிறார்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்