சமூக உதவி தேவைப்படுவோருக்கென ஆண்டு முழுவதும் சிறப்புத் திட்டம்

உதவித் திட்டம் பெரும்பாலும் முதியோருக்கு உகந்தது

சமூக உதவி தேவைப்படுவோருக்கென ஆண்டு முழுவதும் சிறப்புத் திட்டம்

2 mins read
எச்எஸ்பிசி நிதி நிறுவனம் தொண்டூழிய அமைப்புடன் இணைகிறது
49514140-68df-4460-affb-eff58f7b6c85
பூன் லேயில் உள்ள என்டியுசியின் துடிப்புடன் மூப்படையும் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் சமூக உதவியைச் சார்ந்துள்ள 250க்கும் மேற்பட்டோருக்கு, குறிப்பாக முதியோருக்கு ஆண்டு முழுவதும் பல சிறப்புத் திட்டங்கள் எச்எஸ்பிசி நிதி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லாபநோக்கமற்ற தொண்டு அமைப்பான ‘ஆர்எஸ்விபி சிங்கப்பூர்’ என்ற அமைப்புடன் எச்எஸ்பிசி இணைந்து அந்தத் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது.

பூன் லேயில் உள்ள துடிப்புடன் மூப்படையும் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அத்திட்டத்தின் தொடக்க விழா இடம்பெற்றது. அந்நிகழ்வில் கல்வி அமைச்சரும் சமூகச் சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டு சிறப்பித்தார்.

முதியோர்களில் தனித்து வாழ்வோர் போன்றோருக்குத் திட்டங்கள் பெருமளவு வடிவமைக்கப்பட்டுள்ளன.

நிதிச் செயல்பாடுகள் பற்றிய புரிந்துணர்வு, மோசடிகளுக்கு எதிரான விழிப்புணர்வு, ஆரோக்கிய வாழ்க்கைமுறைக்கு ஏற்ற சுகாதார நடவடிக்கைகள் போன்றவற்றுடன் இல்ல மேம்பாடுகளுக்குத் தேவையான உதவிகளும் திட்டத்தில் உள்ளடங்கும்.

சமூகப் பங்காளிகளுடனும் துடிப்புடன் மூப்படையும் நிலையங்களுடனும் இணைந்து உதவி தேவைப்படுவோர் பலனடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இல்லங்களில் அத்தியாவசியச் சேவை

வீட்டைச் சுத்தம் செய்தல், முறையற்ற வகையில் வைக்கப்பட்ட பொருள்களைச் சரிபடுத்துதல், சிறிய அளவிலான இல்ல மேம்பாட்டுப் பணிகள் போன்றவற்றை மேற்கொள்ள பூன் லே குடியிருப்பில் உள்ள 25 வீடுகள் திட்டத்தின் அங்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அங்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு அந்த உதவிப் பணிகள் வழங்கப்படும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அச்சேவைகளை ‘ஹெபிடெட் ஃபார் ஹியுமெனிட்டி சிங்கப்பூர்' என்ற தொண்டு அமைப்பு தேர்வு செய்யப்பட்ட வீடுகளில் செய்யவுள்ளது.

அந்த அமைப்பு, 2004ஆம் ஆண்டு முதல் உதவி தேவைப்படும் பாதிப்படைந்த இல்லங்களுக்கு பலவித நற்சேவைகளை வழங்கிவந்துள்ளது.

அவ்வட்டாரத்தில் பொதுப் பணியில் அனுபவம் உள்ள சமூகப் பங்காளிகள் உதவி தேவைப்படும் இல்லங்களைத் தேர்வு செய்தனர்.

சிங்கப்பூரின் மற்ற வட்டாரங்களுக்கும் இத்திட்டம் இவ்வாண்டில் விரிவுபடுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்