சைனாடவுன் குடியிருப்பாளர் ஒருவர், ஜூலை மாதம் 6ஆம் தேதி ஷெங் சியோங் பேரங்காடியில் S$20 மதிப்புள்ள தனதுஎஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த முயன்றபோது அந்தப் பற்றுச்சீட்டுகளில் ஒன்று ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தமது இரு மகன்களும் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர், திரு லி, 64 காவல்துறையில் புகார் அளித்தார்.
ஜூலை 2 ஆம் தேதி, தாமும் தனது மனைவியும் கிரேத்தா ஆயர் சமூக மன்றத்தில் தங்கள் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றதாகவும் தம்பதியினர் அவற்றை எளிதாகப் பயன்படுத்த ஊழியர் ஒருவர் அவற்றைக் காகிதத்தில் அச்சிட்டுக் கொடுத்ததாகவும் திரு லீ ஷின்மின் சீனச் செய்தித்தாளிடம் கூறினார்.
பரிவர்த்தனை பதிவின்படி, ஜூலை 12 நிலவரப்படி அவரது $800 எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளில் $417 ஏற்கெனவே செலவிடப்பட்டுள்ளது தெரியவந்தது. திரு லியும் அவரது மனைவியும் $42 மட்டுமே செலவிட்டுள்ளனர்.
திரு லி ஹாங் லிம் காம்ப்ளெக்சில் வசிக்கிறார். அவரது பற்றுச்சீட்டுகள் ரெட்ஹில் உணவு மையம், ஓல்டு ஏர்போர்ட் ரோடு அங்காடி நிலையம் போன்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பற்றுச்சீட்டுகளை எவரிடமும் பகிரவோ, இணையத்தில் பயன்படுத்தவோ இல்லை என்று கூறிய திரு லீ, பற்றுச்சீட்டுகளை தெரியாத ஒருவர் எப்படிப் பயன்படுத்தினார் என்பது தங்களுக்குப் புரியவில்லை என்றனர்.
சைனாடவுன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால், பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தியவரை விரைவில் அடையாளம் காண முடியும் என்று நம்புவதாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.