ஆட்குறைப்பு நடவடிக்கைகளின்போது நியாயமின்றி நடத்தப்படுவதிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், நீண்டகாலத்துக்கு இங்கு நல்ல வேலைகளை உருவாக்கி அவற்றைப் பாதுகாப்பதில் வர்த்தக நீக்குப்போக்கையும் சிங்கப்பூர் வழங்க வேண்டும்.
வர்த்தகங்கள், சந்தை நிலவரத்துக்கு ஏற்றாற்போல தங்களை மாற்றி அமைத்துக்கொண்டு, வர்த்தக முறையை உருமாற்ற நீக்குப்போக்கு வகைசெய்வதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அண்மையில் டைசன் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை நடந்ததன் எதிரொலியாக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திரு ஸாக்கி பதிலளித்துப் பேசினார்.
“மற்ற நாடுகளில் தொழிலாளர் சந்தையில் நீக்குப்போக்கு இல்லை, அல்லது தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது,” என்றார் அவர்.

