‘ஸ்போர்ட்ஸ் டிரேவல் 360’ பயண நிறுவன உரிமம் ரத்து: எஸ்டிபி

‘ஸ்போர்ட்ஸ் டிரேவல் 360’ பயண நிறுவன உரிமம் ரத்து: எஸ்டிபி

1 mins read
1f3d26a1-7ec6-4607-8088-3123f791d264
ஸ்போர்ட்ஸ் டிரேவல் 360 தற்போதுள்ள வாடிக்கையாளரின் பணத்தைத் திரும்பக் கொடுக்கவேண்டும் என்று சிங்கப்பூர்ச் சுற்றுலா வாரியம் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்ச் சுற்றுலா வாரியம், ஸ்போர்ட்ஸ் டிரேவல் 360 எனும் பயண நிறுவனத்தின் உரிமத்தை ரத்துசெய்வதாக வியாழக்கிழமை (மே 21) அறிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தால் இனி எந்தவித பயண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.

வாரியத்திடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் பயண முகவர் வர்த்தகத்தை நிறுவனம் முழுமையாக நிறுத்திக்கொண்டதாக வாரியம் தெரிவித்தது.

அத்துடன் பயண முகவர்கள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கான உரிமக் கட்டமைப்பிலும் ஸ்போர்ட்ஸ் டிரேவல் 360 நிறுவனம் தங்களைத் தொடர்புகொள்வதற்கான விவரங்களையும் பதிவிடவில்லை.

நிறுவனத்தின் கணக்குகள், வருடாந்தர வர்த்தக லாபங்கள் குறித்தும் ஸ்போர்ட்ஸ் டிரேவல் 360 நிறுவனம் வாரியத்திடம் தெரிவிக்கத் தவறிவிட்டது.

ஸ்போர்ட்ஸ் டிரேவல் 360 தற்போதுள்ள வாடிக்கையாளரின் பணத்தைத் திரும்பக் கொடுக்கவேண்டும் என்றும் உரிமம் பெற்ற பயண நிறுவனங்களிடம் எஞ்சியுள்ள பயண ஏற்பாடுகளை ஒப்படைக்கவேண்டும் என்றும் வாரியம் தெரிவித்தது.

ஸ்போர்ட்ஸ் டிரேவல் 360 அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த தொடர்பு எண்ணும் வேலை செய்யவில்லை.

ஸ்போர்ட்ஸ் டிரேவல் 360 என்ற பெயர் கொண்ட வரத்தகம் ஒன்று 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவுசெய்யப்பட்டதாக பிஸ்ஃபைல் தளத்தில் காண முடிகிறது.

குறிப்புச் சொற்கள்