தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலையிட அபாயங்கள் குறித்து கற்பிக்க என்டியுசி புதிய பிரசார இயக்கம்

1 mins read
e7ca85a4-cf14-4c62-8c2c-7c7412562b5a
இந்தப் பிரசார இயக்கம், பொதுவான பணியிடப் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து ஊழியர்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலையிடத்தில் பாதுகாப்பு அபாயம் ஏதேனுமிருப்பின் அதுபற்றித் தெரிவிக்க ஏதுவாக ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய மூன்று மாத பிரசார இயக்கத்தை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) வெள்ளிக்கிழமை தொடங்கியது.

‘கண்டறி, நிறுத்து, தெரிவி’ என இந்தப் பிரசார இயக்கத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரசாரமானது, பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கும் முறையை எளிதாக்குவதையும் பொதுவான பணியிட அபாயங்கள் குறித்து ஊழியர்களுக்குக் கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஊழியர்களுக்கு வேலையிடத்தில் ஏற்படும் சிக்கல்கள் குறித்துப் புகாரளிப்பதற்கான உரிமை, பொதுவான பணியிடப் பாதுகாப்பு அபாயங்கள், அத்துடன் பணியிடத்தில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கத் தங்கள் நிறுவனத்துடன் இணைந்து எப்படிச் செயல்படுவது, நிறுவனத்தின் புகார் அளிக்கும் முறையை எவ்வாறு பயன்படுத்துவது போன்றவற்றை முன்னிலைப்படுத்தித் துண்டுப் பிரசுரங்கள், காணொளிகள் வாயிலாக தொழிலாளர்களுக்குக் கற்பிக்கப்படும் என என்டியுசி தெரிவித்தது.

வேலையிடப் பாதுகாப்பு அபாயங்களுக்கு எதிராக நிறுவனங்கள் திறம்படச் செயலாற்ற இது போன்ற பிரசாரங்கள் உதவும் என்றும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்