இந்தியாவில் தொடங்கப்பட்டு தற்போது உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘பிளான்ட்4மதர்’ இயக்கத்திற்குப் பங்களிக்கும் விதமாக ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே, நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைத் தலைவருமான நீல் பரேக் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
காலங்காலமாகப் பசுமையைப் போற்றும் சிங்கப்பூரின் கொள்கையுடன் இந்தியாவின் பசுமை இயக்கமான ‘பிளான்ட்4மதர்’ ஒத்துப்போவதாக ஸ்ரீ நாராயண மிஷனின் தலைவர் அனில் சரசிஜாக்ஷன் வரவேற்புரையில் தெரிவித்தார்.
திட்டத்தைப் பாராட்டிய டாக்டர் ஷில்பக் அம்புலே, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா கடப்பாடு கொள்ளும் என மறுவுறுதிப்படுத்தினார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, இடையே சிறப்பு விருந்தினர்கள் ஒன்றுசேர்ந்து வேப்ப மரத்தை நட்டனர்.

