இலங்கை வெளியுறவு அமைச்சர் சிங்கப்பூர் வருகை

இலங்கை வெளியுறவு அமைச்சர் சிங்கப்பூர் வருகை

1 mins read
3a258299-81d4-4948-99ee-6982bbf09864
இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி. - படம்: ஏஎஃப்பி

இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இருநாள் (ஜூலை 7 - 8) அதிகாரபூர்வப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார்.

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பை ஏற்று அவர் இங்கு வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமது இந்தப் பயணத்தின்போது, மூத்த அமைச்சர் லீ சியன் லூங், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் ஆகியோரைத் திரு சப்ரி சந்தித்துப் பேசுவார் என இலங்கை ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

சிங்கப்பூர் - இலங்கை இடையிலான பன்முகத்துவம் கொண்ட உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர் கலந்தாலோசிப்பார் எனக் கூறப்பட்டது.

அத்துடன், ஜூலை 9ஆம் தேதி இங்கு நடைபெறும் ‘ராய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் ஆசிய பசிபிக் உச்சநிலை மாநாடு - 2024’ நிகழ்விலும் திரு சப்ரி கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்