ஸ்ரீ மாரியம்மன் கோயில் வெள்ளி ரத ஊர்வலம்

ஸ்ரீ மாரியம்மன் கோயில் வெள்ளி ரத ஊர்வலம்

1 mins read
1d628453-cf70-4d1b-8e27-47cf9acbe434
படம்: - த. கவி

இவ்வாண்டு தீமிதித் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ மாரியம்மன் கோயில் வெள்ளி ரதம், அக்டோபர் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, எவர்ட்டன் பார்க் பன்னோக்கு மண்டபம், முன்னைய வேல்முருகன் கோயில் அமைந்திருந்த, ஜாலான் புக்கிட் மேரா புளோக் 141, 142, புளோக் 109 புக்கிட் பெர்மாய் ரோடு, புளோக் 29 தெலுக் பிளாங்கா ரைஸ் ஆகிய இடங்களில் நின்று, பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டபின், நள்ளிரவுவாக்கில் ஆலயத்தை வந்தடைந்தது. வெள்ளி ரத ஊர்வலத்தின் இரண்டாம் நாளான சனிக்கிழமையன்று, ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து வெள்ளி ரதம் மாலை 5.00 மணிக்குப் புறப்பட்டு, புளோக் 62 தெலுக் பிளாங்கா ஹைட்ஸ், டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் கோயில், புளோக் 28 டிரைவ் வேக்கு அருகில் உள்ள ஹோன் ஃபாட் ரோடு, புளோக் 123 ஜாலான் புக்கிட் வியூ ஆகிய இடங்களில் நின்று, பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டபின் நள்ளிரவுவாக்கில் ஆலயத்தை வந்தடையும்.

குறிப்புச் சொற்கள்