தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிநவீன 14 ஹெக்டர் கப்பல் பட்டறையைத் திறந்த எஸ்டி என்ஜினியரிங்

2 mins read
eb46384a-a65e-4a71-b124-23e7379df62c
எஸ்டி இன்ஜினியரிங்கின் கடல்துறை திட்ட மேலாளர் சுபாஷ் நாகலிங்கம், 37, செப்டம்பர் 18 அன்று கல் கப்பல் கட்டும் தளத்தில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கப்பல்களைக் கட்டவும் பழுதுபார்க்கவும் புதிய உயர் தொழில்நுட்பக் கப்பல் பட்டறை ஒன்று சிங்கப்பூரின் மேற்குப் பகுதியின் கல் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது.

எஸ்டி என்ஜினியரிங் நிறுவனத்தால் இயக்கப்படும் 14 ஹெக்டர் பரப்பளவு கொண்ட, ஏறக்குறைய 20 காற்பந்துத் திடல்களின் அளவுகொண்ட கப்பல் பட்டறை $95 மில்லியனுக்கு வாங்கப்பட்டது. இது 2024ஆம் ஆண்டின் இறுதியில் குத்தகை காலாவதியாக உள்ள துவாஸ் கப்பல் பட்டறைக்கு மாற்றாக அமையும்.

செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட கல் கப்பல் பட்டறை, துவாஸ் கப்பல் கட்டுமானத் தளத்தைவிட இரண்டு மடங்கு பெரியது.

கருவிகள் செயலிழப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியும் அமைப்பு, அடையாளம் காணப்பட்ட ஆபத்துகளையும் எச்சரிக்கக்கூடிய பாதுகாப்பு இயந்திர மனிதர்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை அப்பட்டறை கொண்டுள்ளது.

எஸ்டி இன்ஜினியரிங்கின் புதிய கல் கப்பல் கட்டும் தளத்தில் ஆளில்லா வானூர்தி ஆய்வை பார்வையாளர்கள் பார்க்கின்றனர்.
எஸ்டி இன்ஜினியரிங்கின் புதிய கல் கப்பல் கட்டும் தளத்தில் ஆளில்லா வானூர்தி ஆய்வை பார்வையாளர்கள் பார்க்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கல் கப்பல் பட்டறை, பெரிய, சிக்கலான திட்டங்களை மேம்பட்ட துல்லியத்துடனும் திறமையுடனும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் விரிவாக்கப்பட்ட வசதி நேரத்தைக் குறைத்து, உள்ளூர் கடற்படைத் தேவைகளுக்கு மேம்பட்ட ஆதரவை வழங்கும். புதிய சந்தைகளை ஆராயும் ஆற்றலையும் வழங்கும் என்று எஸ்டி என்ஜினியரிங் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தது.

கல் கப்பல் பட்டறை வலுவான மின்னிலக்க அடித்தளத்துடன் கட்டப்பட்டது என்று அதன் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் பங்கேற்ற எஸ்டி என்ஜினியரிங் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான வின்சென்ட் சோங் கூறினார்.

42 வயதான எஸ்டி இன்ஜினியரிங் மூத்த மேற்பார்வையாளர் தேவானந்த் யாதவ், செப்டம்பர் 18 அன்று, கல் கப்பல் கட்டும் தளத்தில் அறிவார்ந்த தலைக்கவசத்தைக் காட்சிப்படுத்துகிறார்.
42 வயதான எஸ்டி இன்ஜினியரிங் மூத்த மேற்பார்வையாளர் தேவானந்த் யாதவ், செப்டம்பர் 18 அன்று, கல் கப்பல் கட்டும் தளத்தில் அறிவார்ந்த தலைக்கவசத்தைக் காட்சிப்படுத்துகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அறிவார்ந்த தலைக்கவசம்.
அறிவார்ந்த தலைக்கவசம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தானியங்கி வாகனங்கள், தலைக்கவசம், கைக்கடிகாரங்கள் போன்ற அறிவார்ந்த சாதனங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கப்பல் பட்டறை செயல்பாடுகளைச் சீரமைக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும் இது உதவும்.

அறிவார்ந்த கைக்கடிகாரங்கள், தலைக்கவசங்கள், ஆளில்லா விமானங்கள் (டிரோன்), ஐஓடி (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) சாதனங்களில் எஸ்டி இன்ஜினியரிங்கின் முதலீடுகள், ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவசியமாக இருக்கும் அதேவேளையில் சுமுகமான, சிறந்த செயல்பாடுகளை உறுதி செய்கின்றன என்று தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் குறிப்பிட்டார்

சிங்கப்பூர் கடல்படைத் தற்காப்பு, கப்பல் கட்டுமானம், கப்பல் பழுதுபார்ப்பு திறன்கள் எதிர்காலத்துக்கு ஏற்றதாக தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கும் புத்தாக்கம் பெறுவதற்கும் எஸ்டி என்ஜினியரிங் கொண்டுள்ள கடப்பாட்டை புதிய கப்பல் பட்டறை மெய்ப்பிக்கிறது என்றும் திரு டான் கூறினார்.

அறிவார்ந்த கைக்கடிகாரம்.
அறிவார்ந்த கைக்கடிகாரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்