கேலாங் வட்டாரத்தில் 51 வயது ஆடவரைக் கத்தியால் 20 வயது மதிக்கத்தக்க இளையர்கள் இருவர் மீது ஆபத்தான ஆயுதத்தால் தாக்கியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஷின் மின் நாளிதழ் அறிக்கையின்படி, அவர்கள் அந்த 51 வயது நபரின் இடது மணிக்கட்டையை சமையலறை கத்தியால் வெட்டி உயிருக்கு ஆபத்தான காயத்தை ஏற்படுத்தினர்.
அந்தக் கத்தியால் ஆடவரின் மூன்று விரல்களில் உள்ள நரம்புகள், ரத்தக்குழாய்கள் தசைநார்கள் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) அதிகாலை 5 மணியளவில் கேலாங் லோரோங் 25ஏயில் உள்ள உணவகத்திற்கு வெளியே நடைபெற்றது.
வாசகர் ஒருவர் அளித்த தகவலின் பேரில், சம்பவம் நடந்த நாளன்று உணவகத்தைப் பார்வையிட்ட ஷின்மின் பத்திரிகையாளர்கள், உணவகத்தின் வெளிப்புறச் சுவர்களிலும் அருகில் உள்ள சாலையிலும் ரத்தக் கறைகளைக் கண்டனர்.
சம்பவ இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு அருகிலுள்ள தரையில் ரத்தக் கறைகள் காணப்பட்டன.
சம்பவத்தை நேரில் பார்த்த உணவக ஊழியர் ஒருவர், பாதிக்கப்பட்ட நபர் உணவருந்திவிட்டு உணவகத்திற்கு வெளியே அமர்ந்திருந்ததாகக் கூறினார். அப்போது சம்பந்தப்பட்ட இரண்டு இளையர்கள் அந்த நபரின் மேசைக்குச் சென்று பேசியதை அடுத்து, மூவரும் சாலையின் ஓரத்தில் நடந்து சென்றனர்.
திடீரென அந்த இளையர்களில் ஒருவர் சமையலறைக் கத்தியை எடுத்து பாதிக்கப்பட்டவரைத் தாக்க முயன்றபோது, அவர் அதைத் தடுக்க கையை உயர்த்தினார். அதில் அவரது கை வெட்டப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“வெட்டப்பட்ட பிறகு அந்த நபர் கடுமையான இரத்தப்போக்குடன் ஓடினார். அந்த இரண்டு பேரும் சமையலறை கத்தியுடன் அவரைத் துரத்தினர். அந்தக் கட்சி மிகவும் பயங்கரமாக இருந்தது” என்று அந்த ஊழியர் கூறினார்.
உதவிக்கான அழைப்பு, காவல்துறையினருக்கு கிட்டத்தட்ட ஆறு மணிக்கு வந்ததாகக் கூறப்பட்டது. இதன் தொடர்பாக 24 வயது இளையர் ஒருவரும் 26 வயது இளையரான மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர். தாக்கப்பட்ட ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.