பேராசிரியர் டாமி கோவுக்கு இந்தோனீசிய விருது

பேராசிரியர் டாமி கோவுக்கு இந்தோனீசிய விருது

1 mins read

சிங்கப்பூர் பொதுத் தூதர் பேரா சிரியர் டாமி கோவுக்கு இந்தோ னீசியாவின் முதலாவது மொக்தார் குசுமத்வஜா விருது வழங்கி சிறப் பிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக சட்டத்தில் சிறந்து விளங்கி வரும் நிபுணர்க ளுக்கு இந்த விருது வழங்கப்படுவ தாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தோனீசியாவின் முன்னாள் சட்ட, வெளியுறவு அமைச்சரான மொக்தார் குசுமத்வஜாவின் நினை வாக வழங்கப்படும் இந்த விருது அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு, பட்சாட்ஜரான் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் வழங்கப்படுகிறது. 70 வயதாகும் பேராசிரியர் கோவுக்கு இந்த விருதை வழங் கினார் இந்தோனீசியாவின் வெளி யுறவு துணை அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் முகம்மது ஃபச்சிர். சிங்கப்பூர் வெளியுறவு அமைச் சின் பொதுத் தூதரான பேராசிரியர் கோ, அனைத்துலக அளவில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தவர் என் றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் அனைத்துலகச் சட்டத் துறை ஆளுநர் மன்றத்தின் தலை வராக உள்ளார் என்றும் விருது வழங்கும் சடங்கில் தெரிவிக்கப் பட்டது.