சுதாஸகி ராமன்
வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாளிலேயே கடலில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கிய 'ஏர் ஏஷியா QZ8501' விமானத்தைத் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டார் கடற்படை போர் பிரிவின் வீரர் சிவராஜா சுப்பிரமணியம். கடந்த 2014ஆம் ஆண்டில் இந்தோனீசியாவின் சுரபாயா நக ரத்திலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்துகொண்டிருந்த போது கடலில் விழுந்த விமா னத்தை மீட்பதற்காக கடலுக்கு செல்ல வேண்டிய கப்பல்கள் சீராக செயல்படுகின்றனவா என்பதை குறுகிய நேரத்திற்குள் திரு சிவ ராஜா சரி பார்த்தார்.
கடந்த 1995ஆம் ஆண்டு தேசிய சேவையில் சேர்ந்த அவர், அதன் பின்னர் கடற்படையில் சேர்ந்து தேசத்திற்கு சேவையாற்ற முடிவு செய்தார். ஏர்ஏஷியா விமானத்தைத் தேடி மீட்கும் பணியில் தொடங்கி பல பணிகளில் ஈடுபட்டு சேவை யாற்றியுள்ள அவருக்கு இம்மாதம் 17ஆம் தேதி செயல்திறன் பதக்கம் (ராணுவம்) அளிக்கப்பட்டது. சிறப்பான செயல்திறன், சேவைக்கான அர்ப்பணிப்பு, கடின உழைப்புடன் விடாமுயற்சி ஆகிய வற்றை வெளிப்படுத்தும் ராணுவ வீரர்களுக்கு இந்த செயல்திறன் பதக்கம் வழங்கப்படுகிறது.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னிடமிருந்து விருதைப் பெற்றுக் கொள்ளும் கடற்படை அதிகாரி சிவராஜா சுப்பிரமணியம். படம்: தற்காப்பு அமைச்சு

