குடும்ப ஆதரவு இல்லாத முதியவர் களுக்குக் கிடைக்கும் பணத்தைச் சமூக ஊழியர்கள் நிர்வகித்து உதவும் ஓர் ஏற்பாடு விரைவில் நடப்புக்கு வரவிருக்கிறது. தாங் களே முடிவு செய்யமுடியாத நிலையில் உள்ள முதியோருக்கு உதவுவது இந்த ஏற்பாட்டின் நோக்கமாகும். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, 'சமூக உறவுச் சேவை' என்ற ஒரு முன்னோடி திட்டத்தை தொடங்கி இருக்கிறது. தொண்டூழிய நல்வாழ்வு அமைப்புகளைச் சேர்ந்த சமூக ஊழியர்கள் குடும்ப நீதிமன்றங் களுக்கு மனுச்செய்து, தங்கள் பராமரிப்பில் இருக்கும் முதியோ ருக்கு உரிய பணத்தை நிர்வகிக் கும் அதிகாரத்தைத் தங்களுக் குத் தரும்படி கேட்கலாம்.
பிறகு இந்த நீதிமன்றம் முதி யோருக்குத் தேவைப்படும் சுகா தார பராமரிப்பு, குடும்பச் செலவுக் கான தொகையைக் காலக்கிரம முறைப்படி அங்கீகரிக்கும். குடும்ப நீதிமன்றத்திடம் தாக்க லாகும் விண்ணப்பங்களுக்கு இந்த அமைச்சு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த முன்னோடித் திட்டம் 2018ல் தொடங்குகிறது. தொடக்கமாக இத்திட்டத்திற்கு இரண்டு தொண்டூழிய நல்வாழ்வு அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன.

