இயோ சூ காங்கில் இரண்டு கார்கள் மோதியதை அடுத்து அவற்றின் ஓட்டுநர்கள் காயமடைந்தனர். இயோ சூ காங் ரோட்டுக்கும் அங் மோ கியோ அவென்யூ 6க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில், கறுப்பு கார் ஒன்று ஒருபக்கமாக சாய்ந்திருந்ததை வாகனக் கேமராப் பதிவுகள் காட்டின. முன்னர், அந்தக் கறுப்பு கார் மற்றொரு காருடன் மோதி யதை அடுத்து கறுப்பு கார், அருகிலுள்ள விளக்குக் கம்பத்தின் பக்கத்தில் காத்திருந்த வெள்ளைக் காரையும் வேனையும் நோக்கிச் சென்றது. இரவு 7.30 மணிக்கு, சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். காயமடைந்த ஓட்டுநர்கள் இருவரும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டனர்.
இயோ சூ காங்கில் விபத்து; ஓட்டுநர்கள் இருவர் காயம்
1 mins read

