சர்ச்சைக்குரிய விளம்பரத்திற்காக மன்னிப்பு கேட்கும் நெட்ஸ்

சர்ச்சைக்குரிய விளம்பரத்திற்காக மன்னிப்பு கேட்கும் நெட்ஸ்

1 mins read
1f8224d0-ee1c-46ef-9fac-14098dc32937
விளம்பரத்தின் சர்ச்சைக்குரிய இந்தத் தோற்றங்களுக்காக நெட்ஸ் மன்னிப்பு கேட்கிறது. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

ரொக்கமில்லாக் கட்டணங்களைப் பிரபலப்படுத்துவதற்கான விளம்பரம் ஒன்றால் மற்றவர்கள் புண்படுத்தப்பட்டதற்காக 'நெட்ஸ்' மின்-கட்டண நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் மீடியாகார்ப் நிறுவன நடிகர் டென்னிஸ் சியூ பல்வேறு இனங்களைச் சேர்ந்தவராக நடித்ததில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தலையில் முக்காடு அணிந்த மலாய்ப் பெண்ணாகவும் கறுமையான தோல் நிறம் கொண்ட இந்தியராகவும் திரு சியூ அந்த விளம்பரத்தில் தோற்றமளித்திருந்தார்.

இந்த விளம்பரம் இணையத்திலும் உணவங்காடி நிலையங்களிலும் வெளியிடப்பட்டன. புண்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த விளம்பரத்திற்காக நெட்ஸ் மன்னிப்பு கேட்க விரும்புவதாக அந்நிறுவனம் தனது அறிக்கையில் கூறியது. மீடியாகார்ப் நிறுவனம், இந்த விளம்பரத்திற்காக தனது பிரபலங்கள் நிர்வாகப் பிரிவின் வாயிலாக கடந்த வாரம் மன்னிப்பு கேட்டிருந்தது.

இந்த விளம்பரத்திற்கு மட்டுமல்லாமல் விளம்பரத்திற்கு எதிராக வெளியிடப்பட்ட 'ராப்' பாடல் காணொளிக்கு எதிராகவும் போலிசாரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.