ஜூலையில் சில்லறை விற்பனைத்துறை தொடர்ந்து 6வது மாதமாக 1.8% சரிவு 

சிங்கப்பூரின் சில்லறை விற்பனைத்துறை தொடர்ந்து ஆறாவது மாதமாக ஜூலை மாதத்தில் சரிவு கண்டது என்று சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை தெரிவித்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜூலை மாத வளர்ச்சி 1.8% சரிந்தது. இருப்பினும் புளும்பர்க் நிறுவனத்தின் கணிப்பான 2.9 விழுக்காட்டை விட இது குறைவுதான்.

மோட்டார் வாகனங்களின் விற்பனையைத் தவிர்த்து, சில்லறை விற்பனைத் துறை ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 2.4% குறைந்தது. ஜூலை மாதத்தில் மோட்டார் வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.5% ஏற்றம் கண்டது. 

பேரங்காடிகள், மோட்டார் வாகனங்கள், மருத்துவப் பொருட்கள், கழிவறைப் பொருட்கள் தவிர்த்த பெரும் பாலான சில்லறை விற்பனைப் பிரிவுகளில் சரிவு தென் பட்டது. அறைகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவைதான் மிகப் பெரிய அளவில் 8.3% சரிவைச் சந்தித்தன. கணினி, தொலைத்தொடர்புச் சாத னங்கள் விற்பனை 7.7% சரிந்தது.

ஜூலை மாதத்தின் ஒட்டுமொத்த விற்பனை கிட்டத்தட்ட $3.6 பில்லியன் என்றும் அதில் 5.6% தொகை இணையம் வழி சில்லறை விற்பனையிலிருந்து கிடைக்கப்பெற்றது.