சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைகள் அதன் காலாண்டு செய்திக் கடிதத்திற்கு பொருத்தமான பெயரைச் சூட்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த செய்திக் கடிதத்திற்கு தற்போதுள்ள 'பேனடிகோன்' (Panopticon) என்ற பெயர் குறித்து இணையவாசிகளும் கல்வியாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மக்களைத் தொடர்ந்து கண்காணித்து வரும்போது, அது மக்களிடம் ஏற்படுத்தக்கூடிய பயமே அவர்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளத் தூண்டும் என்பது 'பேனடிகோன்' கருத்தாக்கம் ஆகும். இதனை ஆங்கில சிந்தாந்தவாதியான ஜெரமி பென்தம் உருவாக்கிய இந்தக் கருத்தாக்கத்தை, செய்திக் கடிதத்தின் பெயர் பிரதிபலிப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன. "இந்த தலைப்பு தவறாகக் கொள்ளப்படலாம், எதிர்பாராத, தவறான உவமையாக வெளிப்படலாம்," என்பதை சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைகளின் பேச்சாளர் ஒப்புக்கொண்டார்.

