முக்கிய தற்காப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பித்த சிங்கப்பூர், அமெரிக்கா

சிங்கப்பூரின் வான்வெளி, கடற்படைத் தளங்கள் ஆகியவற்றை இன்னும் 15 ஆண்டுகளுக்கு, அதாவது, 2035ஆம் ஆண்டு வரை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் முக்கியமான தற்காப்பு ஒப்பந்தத்தை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆகியோர் புதுப்பித்துக்கொண்டுள்ளனர்.

நியூயார்க் பார்கிளேஸ் ஹோட்டலில் நேற்று (செப்டம்பர் 23) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒப்பந்தம் கையொப்பமானது.

சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில்ஆன நெருங்கிய உறவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவ்விரு தலைவர்களும் 1990ஆம் ஆண்டு கையொப்பமான, சிங்கப்பூரின் வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மறுபதிப்பில் அவர்கள் கையொப்பமிட்டனர்.

1990ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டபோது சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் அமரர் லீ குவான் இயூவும் அமெரிக்க துணை அதிபர் டான் குவாயிலும் கையொப்பமிட்டிருந்தனர். 2005ஆம் ஆண்டு அது புதுப்பிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக அமெரிக்காவின் ராணுவத் தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் போன்றவை கடந்த 30 ஆண்டுகளாக சிங்கப்பூரின் வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றன. பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கை, எரிபொருள் நிரப்புவது, பராமரிப்பு போன்ற வசதிகளை அமெரிக்க ஆகாயப்படை விமானங்கள் சிங்கப்பூரில் பெற முடியும்.

வட்டார அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்கு முக்கிய அம்சமாக விளங்கும் விதத்தில் இந்த வட்டாரத்தில் அமெரிக்காவின் இருப்பை இந்த ஒப்பந்தப் புதுப்பிப்பு ஆதரித்துள்ளது.

சிங்கப்பூர் ஆயுதப் படை அமெரிக்காவின் அரிஸோனா, ஐடஹோ ஆகிய இடங்களில் உள்ள ஆகாயப்படைத் தளங்களைப் பயிற்சிக்காகப் பயன்படுத்தி வருகிறது.

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், அமெரிக்க தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் தொலைபேசி உரையாடல் வழியாக இந்தப் புதுப்பிப்பு குறித்த அங்கீகாரத்தை வெளிப்படுத்தி இருந்தனர். தற்காப்புத் தொழில்நுட்பம், ராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியன பற்றியும் இவ்விரு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதன் தொடர்பில் கடந்த மே மாதம் இங்கு நடைபெற்ற ஷங்ரிலா பேச்சுவார்த்தையின்போது இரு நாட்டின் தற்காப்பு அமைச்சர்களும் முடிவெடுத்திருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!