நூற்றுக்கணக்கான தூக்க மாத்திரைகளை வழங்கிய மருத்துவருக்குத் தடை

நூற்றுக்கணக்கான தூக்க மாத்திரைகளை வழங்கிய மருத்துவருக்குத் தடை

1 mins read
a0caf235-c36e-4601-9460-bb2fec32b3eb
படம்: கூகல் -

நோயாளி ஒருவருக்கு 33 மாதங்களில் 1,100 தூக்க மாத்திரகளை வழங்கிய மருத்துவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்செயலுக்கு இரண்டு ஆண்டுகள் மருத்துவராக பணி செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் வழக்கு விசாரணைக்கு ஐந்து ஆண்டுகள் ஆனதால் தண்டனை ஐம்பது விழுக்காடாக குறைக்கப்பட்டது. ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள மெடிகஸ் கிளினிக், சர்ஜரி மருந்தகத்தின் மருத்துவரான டான் கோக் ஜின் பதிவேடுகளையும் முறையாக வைத்திருக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மொத்தம் 11 நோயாளிகளுக்கு அவர் நூற்றுக்கணக்கான தூக்க மாத்திரைகளை வழங்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்