நயன்தாராவின் பெயரில் சிங்கப்பூர் கோயிலில் அர்ச்சனை செய்த ரசிகர்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நயன்தாராவின் பிறந்தநாளன்று சிங்கப்பூரைச் சேர்ந்த அவரது  தீவிர ரசிகர் ஒருவர் அவரது பெயரில் கோயிலில் அர்ச்சனை செய்து அந்த அர்ச்சனைச் சீட்டை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஈசூனில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் வாங்கப்பட்ட அந்த அர்ச்சனைச் சீட்டில் நயன்தாராகுரியன், திருவோண நட்சத்திரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ரசிகரின் பதிவுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தனது 35வது பிறந்தநாளை கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 18) தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவில் சிறப்பாகக் கொண்டாடினார்.

அமெரிக்காவில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அவையும் ரசிகர்களால் பெரிதும் பகிரப்படுகின்றன.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity