வூஹான்: தொற்றைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை...

வூஹான்: தொற்றைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை...

2 mins read
463507e9-a5bb-49c6-9045-109e0fadbbdb
வூஹான் கிருமித் தொற்றின் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உதவலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் வூஹான் 'கொரோனோ வைரஸ்' தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ள நிலையில் மேலும் சிலரின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கிருமித் தொற்றின் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உதவலாம்.

- உயிருள்ள விலங்குகள், பறவைகள் போன்றவற்றுடனான தொடர்புகளைத் தவிர்த்தல்.

- வேக வைக்காத, சரிவர வேகாத இறைச்சி உணவுகளைத் தவிர்த்தல்.

- கூட்டமான இடங்களைத் தவிர்த்தல்.

- உடல் நலக்குறைவு அல்லது அத்தகைய அறிகுறிகள் உடையவர்களிடமிருந்து ஒதுங்கியிருத்தல்.

- சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பேணுதல்.

- அடிக்கடி கைகளை 'சோப்பு' கொண்டு கழுவுதல்.

- சாப்பிடுவதற்கு முன்பும் கழிவறையைப் பயன்படுத்திய பின்பும், இருமி அல்லது தும்மி கையை அழுக்காக்கிய பிறகும் கைகளை 'சோப்பு' கொண்டு கழுவுதல்.

- இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் முகக் கவசம் அணிதல்.

- இருமும்போது அல்லது தும்மும்போது வாயை திசுத்தாள் கொண்டு மூடிக்கொள்ளுதல், அவ்வாறு அழுக்கான திசுத்தாளை உடனடியாக குப்பைத் தொட்டியில் போடுதல்.

- உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி நாடுதல்.

- உடல் நலக் குறைவால் மருத்துவ உதவியை நாடுவதற்கு முன்பாகவே, முகக் கவசம் அணிவது, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே தொலைபேசி வழி அழைத்து மருந்தகத்துக்குத் தெரிவிப்பது போன்றவற்றுடன், வெளிநாடு சென்று திரும்பியிருந்தால், அது பற்றிய தகவலையும் மருத்துவரிடம் தவறாமல் தெரிவிப்பது. ஆகியவற்றுடன், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பியவர்கள், இங்கு வந்த பிறகு இரு வாரங்களுக்கு உடல் நலத்தைக் கண்காணிப்பது அவசியம் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

#வூஹான் #முன்னெச்சரிக்கைநடவடிக்கை #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்