கன்கார்டு தொடக்கப்பள்ளியில் தீ; 1,400 பேர் வெளியேற்றம்

கன்கார்டு தொடக்கப்பள்ளியில் தீ; 1,400 பேர் வெளியேற்றம்

1 mins read
3a7f044e-0416-499d-94cf-401797e1543b
தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கு வரும் முன்பாகவே, பள்ளி அதிகாரிகள் 1,400 பேரை பாதுகாப்பாக மீட்டனர். சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. படம்: டிஎன்பி வாசகர் -

சுவா சூ காங்கில் உள்ள கன்கார்டு தொடக்கப்பள்ளியில் இன்று (ஜனவரி 29) காலை தீ மூண்டதையடுத்து சுமார் 1,400 பேர் வகுப்பறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

காலை 10.30 மணியளவில் இந்தச் சம்பவத்தின் தொடர்பில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

விளையாட்டுப் பொருள்கள் சேகரித்து வைக்கப்படும் அறையில் மூண்ட தீயை தண்ணீரைப் பீய்ச்சியடித்து அதிகாரிகள் அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கு வரும் முன்பாகவே, பள்ளி அதிகாரிகள் 1,400 பேரை பாதுகாப்பாக மீட்டனர். சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

தீப்பற்றியதற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

#கன்கார்டுதொடக்கப்பள்ளிதீ #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்