வூஹான்: சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆனது

வூஹான்: சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆனது

1 mins read
462941c0-2a60-4255-859c-ca367713e3c9
வூஹான் கிருமித் தொற்றைப் பரிசோதிப்பதற்காக டான் டோக் செங் மருத்துவமனையில் தற்காலிக அவசர பரிசோதனைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

சிங்கப்பூரில் வூஹான் கிருமித் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 10ஐ எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்குமுன் கிருமித் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஏழாக இருந்தது. இதையடுத்து இன்று (ஜனவரி 29) மேலும் மூன்று புதிய சம்பவங்கள் உறுதியாகின.

அம்மூன்று சம்பவங்களிலும் புதிய கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோர் வூஹான் பகுதியிலிருந்து இங்கு வந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு நாளைய (ஜனவரி 30) தமிழ் முரசு நாளிதழைப் படியுங்கள்!

குறிப்புச் சொற்கள்