ஜூரோங் வட்டார எம்ஆர்டி: 3 நிறுவனங்களுக்கு $596 மி. குத்தகை

புதிய ஜூரோங் வட்டார ரயில் வழித்தடத்தில் அமையும் ரயில் நிலையங்களை வடிவமைத்து கட்டுவதற்காக மூன்று நிறுவனங்களுக்கு $596 மில்லியன் மதிப்புள்ள குத்தகைகளை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியுள்ளது.

‘பூன் லே’ ரயில் நிலையத்தை வடிவமைத்துக் கட்டுவதற்கான $172 மில்லியன் குத்தகையை ‘சைனா கம்யூனிகேஷனஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி லிமிட்டெட்’ (சிங்கப்பூர் கிளை) பெற்றுள்ளது.

பூன் லே நிலையத்துடன் ஜுரோங் வெஸ்ட் ஸ்திரீட் 64ல் 800 மீட்டர் மேம்பாலமும் கட்டப்படும்.

தற்போதைய பூன் லே நிலையத்தைக் கொஞ்சம் மாற்றி அமைத்து சிலவற்றைச் சேர்த்து அதை புதிய பூன் லே நிலையத்துடன் இணைக்கும் பணியும் இந்த உடன்பாட்டில் உள்ளடங்கும். புதிய பூன் லே நிலையம் 2026ஆம் ஆண்டு வாக்கில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘செம்ப்கார்ப் டிசைன் அண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ நிறுவனம், ‘ஜெட் போ’ மற்றும் ‘தாவாஸ்’ ரயில் நிலையங்களை வடிவமைத்து கட்டுவதற்கான $226.6 மில்லியன் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் 1.3 கிலோ மீட்டர் நீளம் உள்ள இரண்டு பாலங்களையும் கட்டித்தரும்.

அவற்றில் ஒன்று ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட்டிலும் மற்றொன்று இந்த இரண்டு நிலையங்களுக்கு இடையிலும் அமைந்து இருக்கும்.

இந்த இரு நிலையங்களுக்கும் இப்போது தற்காலிகமாக ஜெட் போ, தாவாஸ் நிலையங்கள் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இவை இரண்டும் 2026ல் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கொரியாவின் ‘டேலிம் இன்டஸ்ட்டிரியல்’ என்ற நிறுவனம், ‘ஜூரோங் ஈஸ்ட்’ ரயில் நிலையத்தைக் கட்டுவதற்கான $197.4 மில்லியன் குத்தகையைப் பெற்றுள்ளது.

இந்த நிலையம் 2027ல் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3வது ஒப்பந்தம் இந்த நிலையத்தில் புதிய 500மீட்டர் மேம்பாலம் ஒன்றைக் கட்டவும் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள வடக்கு- தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு வழித்தடங்களில் உள்ள ஜூரோங் ரயில் நிலையத்தை திருத்தி அமைத்து அதில் சிலவற்றைச் சேர்த்து அதை புதிய ஜூரோங் ஈஸ்ட் நிலையத்துடன் இணைப்பதற்கான குத்தகையும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கும்.

புதிய ஜூரோங் வட்டார ரயில் வழித்தடம், சிங்கப்பூரின் ஏழாவது எம்ஆர்டி வழித்தடம் ஆகும்.

இது முற்றிலும் மேல்மட்டத்தில் செல்லும். 2028ல் இந்த வழித்தடத்தில் 24 ரயில் நிலையங்கள் சேவையில் இருக்கும்.

#தமிழ்முரசு #குத்தகை #ரயில்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!