அதிகமான வேலையிழப்பைத் தடுப்பதில் அமைச்சு கவனம்

1 mins read
7b8519c4-31b9-4545-a606-c2116bec6db0
ஊழியர்களைப் பயிற்சிக்கு அனுப்பி அவர்களின் திறன்களை வளர்க்க நிறுவனங்கள் முற்பட வேண்டும் என மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேவைக்கு அதிகமான ஊழியர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் மனிதவளத்தை நிர்வகிப்பது மற்றும் பொறுப்பான முறையில் ஆட்குறைப்பில் ஈடுபடுவது தொடர்பிலான முத்தரப்பு அறிவுரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த புதிய வழிமுறைக்கு இணங்க, ஆட்குறைப்பைச் செய்வதற்கு முன்னர் ஊழியர்களைப் பயிற்சிக்கு அனுப்பி அவர்களின் திறன்களை வளர்க்க நிறுவனங்கள் முற்பட வேண்டும் என மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.

அதிகப்படியான வேலையிழப்பைத் தடுப்பதுவே மனிதவள அமைச்சின் தற்போதைய தலையாய பொறுப்பாக உள்ளது என்று இன்று (மார்ச் 11) நடைபெற்ற முதலாளிகளுடனான கலந்துரையாடலில் அவர் குறிப்பிட்டார்.

#சிங்கப்பூர் #வேலையிழப்பு #பயிற்சி

குறிப்புச் சொற்கள்