‘அத்தியாவசிய பொருட்களைப் பொறுப்புடன் வாங்கினால் கையிருப்பு போதுமானது’

மலேசியாவிலிருந்து உணவு விநியோகம் தடைப்பட்டால் அதனைக் கையாளுவதற்கான திட்டங்களை சிங்கப்பூர் வகுத்துள்ளதாகவும் சிங்கப்பூரர்கள் பொறுப்புணர்வுடன் பொருட்களை வாங்கினால், தேசிய இருப்பில் மூன்று மாதங்களுக்கும் அதிகமான அளவு பொருட்கள் இருப்பதாகவும் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

அன்றாடம் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்யும் மலேசியர்களுக்கு தற்காலிக தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தர, சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் போன்றவற்றிடமிருந்து முதலாளிகள் உதவி பெறலாம் என்று செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 17) அவர் கூறினார்.

நாடு முழுவதும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தப்போவதாக மலேசியா அறிவித்திருப்பது குறித்து சிங்கப்பூரர்கள் கவலை அடைந்துள்ளதைத் தொடர்ந்து திரு சான் மேற்கண்ட உத்தரவாதத்தை அளித்தார்.

இந்த விவகாரத்தின் தொடர்பில், இன்னும் சில அம்சங்கள் குறித்து மலேசியாவுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றாலும், நிலைமையைக் கையாளுவதற்கான திட்டங்கள் சிங்கப்பூரிடம் இருப்பதாக அவர் சொன்னார்.

கையிருப்பை அதிகரித்தல், உள்ளூர் உற்பத்தி, விநியோக வளங்களைப் பல்வகைப்படுத்துதல் ஆகிய உத்திகளை இணைத்து நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுவதால் பொருள் விநியோகமும் கட்டுப்படுத்தப்படும் என்று அர்த்தமல்ல என்றார் அவர்.

“தேசிய இருப்பில் மூன்று மாதங்களுக்கும் அதிகமான அளவு அரிசி, நூடல்ஸ் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் இருக்கின்றன. காய்கறிகள், புரதச்சத்து உணவு வகைகள் ஆகியவை இரண்டு மாதங்களுக்குத் தேவையானதைவிடவும் அதிகமான அளவில் உள்ளது,” என்று திரு சான் சொன்னார்.

மலேசியாவிலிருந்து முட்டை வரத்து தடைப்பட்டால், அவற்றை மாற்று வழிகள் மூலம் தருவிக்கும் நடைமுறை நடப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க இங்குள்ள பல்வேறு பேரங்காடிகளில் இன்று மக்கள் நீண்ட வரிசை பிடித்து நின்றனர்.

பதற்றப்படாமல் தொடர்ந்து நிதானத்துடன் இருக்குமாறு தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

என்டியுசி ஃபேர்பிரைஸ் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியான் பெங்குடன் சேர்ந்து நிலைமையைத் தாம் அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

#சிங்கப்பூர் #மலேசியா #கொரோனா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!