சுடச் சுடச் செய்திகள்

வங்கிக் கொள்ளை: சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்ட கனடா நாட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

இங்குள்ள ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கியின் ஹாலந்து வில்லேஜ் கிளையில் 2016ஆம் ஆண்டில் $30,000 கொள்ளையடித்ததன் சந்தேகத்தின் பேரில் கனடா நாட்டவரான டேவிட் ஜேம்ஸ் ரோச், சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டதுடன் இன்று (மார்ச் 17) நீதிமன்றத்தில் ரோச் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கொள்ளை, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது ஆகிய குற்றங்களின் தொடர்பில் ரோச் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

வங்கிக்குள் சென்ற ரோச், தன்னிடம் ஆயுதம் இருப்பதாகவும் தான் கேட்கும் தொகை வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்ட ஒரு தாளை வங்கி ஊழியரிடம் தந்ததாக கூறப்படுகிறது.

பணத்தைப் பெற்றுக்கொண்ட ரோச், தாய்லாந்துக்குத் தப்பியோடியதாகவும் குற்றங்கள் புரிந்ததால் அங்கு ரோச்சுக்கு 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது. 

அதைத் தொடர்ந்து கனடாவுக்கு அனுப்பப்பட்ட ரோச்சை நிறுத்தி வைக்குமாறு சிங்கப்பூர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க லண்டன் ரோச்சைக் காவலில் வைத்திருந்தது.

இதனிடையே பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி ரோச்சுக்கு சிங்கப்பூர் பிரம்படி விதிக்காது என்று உறுதியளித்த பின்னரே ரோச் சிங்கப்பூரை வந்தடைந்ததாக சொல்லப்படுகிறது.

#தமிழ் முரசு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon