ஜூரோங் வெஸ்டில் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட ஆறு பதின்ம வயது பையன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 2ல் பையன்கள் சண்டையில் ஈடுபட்டிருப்பதாக கடந்த 12ஆம் தேதி இரவு 7.55 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பையன்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திய ஜூரோங் போலிஸ் பிரிவு அதிகாரிகள், சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 16) அறுவரையும் கைது செய்தனர்.
இந்த அறுவர் மீது, கலவரத்தில் ஈடுபட்டதாக நாளை (மார்ச் 19) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
கலவரத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை, பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப்படலாம்.
#சிங்கப்பூர் #கலவரம் #ஜூரோங்

