ஈனோசில் உணவகத்துக்குள் புகுந்த கார்

1 mins read
df39704f-5982-4877-ac02-4793daab6138
கிம்ஸ் ஃபிரைடு ஹொக்கியன் பிரான் மீ கடைக்குள் கார் புகுந்ததைக் காட்டும் காணொளிகள், படங்கள் ஸ்டோம்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன. படம்: ஸ்டோம்ப் -

ஜாலான் கெச்சோட், ஜாலான் ஈனோஸ் ஆகியவற்றின் சந்திப்பில் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றுக்குள் நேற்று முன்தினம் (மார்ச் 16) காரைச் செலுத்திய 37 வயது ஆடவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

கிம்ஸ் ஃபிரைடு ஹொக்கியன் பிரான் மீ கடைக்குள் கார் புகுந்ததைக் காட்டும் காணொளிகள், படங்கள் ஸ்டோம்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உடைந்துபோன மேசைகள், நாற்காலிகள், தட்டுகள், முள்கரண்டி, வெட்டும் கருவிகள் போன்றவை தரையில் சிதறிக் கிடந்ததை படங்கள் காட்டின.

இந்தச் சம்பவம் பற்றி இரவு 11.32 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை; விசாரணை தொடர்கிறது.

#சிங்கப்பூர் #உணவகம்

குறிப்புச் சொற்கள்