சிங்கப்பூரில் திரையரங்குகள் மூடப்படவில்லை; புதிய படங்கள்கூட வெளியாகுமாம்

சிங்கப்பூரில் திரையரங்குகள் மூடப்படவில்லை; புதிய படங்கள்கூட வெளியாகுமாம்

1 mins read
0720fba3-653f-4541-b677-0560bd6ba58c
தற்போது திரையரங்குகளை மூடத் திட்டமில்லை என்று 'கோல்டன் வில்லேஜ்', 'ஷா தியேட்டர்ஸ்', 'கெத்தே சினிபிளக்ஸ்' போன்ற முக்கிய திரையங்கு நிறுவனங்கள் கூறியுள்ளன. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமித்தொற்றால் உலகநாடுகளின் திரையரங்குகள் மூடப்பட்டாலும் சிங்கப்பூரில் நிலைமை வேறு.

தற்போது திரையரங்குகளை மூடத் திட்டமில்லை என்று 'கோல்டன் வில்லேஜ்', 'ஷா தியேட்டர்ஸ்', 'கெத்தே சினிபிளக்ஸ்' போன்ற முக்கிய திரையங்கு நிறுவனங்கள் கூறியுள்ளன.

சில திரைப்படங்களை வெளியிடுவதை நிறுவனங்கள் தள்ளிப்போடுகின்றன. இருப்பினும், வரும் வாரங்களில் புதிய படங்கள் வெளியாகக்கூடும் என்று கோல்டன் வில்லேஜ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

திரையரங்குகளுக்கு கூட்டத்தை இழுப்பதற்காக குறைந்த கட்டணத்தில் சற்று பழைய ஹாலிவுட் திரைப்படங்களை மீண்டும் அரங்கேற்றுகின்றன.

அணுக்கநிலை தவிர்த்தலுக்கான வழிகாட்டிகளை சுகாதார அமைச்சு அறிவுறுத்தி வருவதைக் கருத்தில் கொண்டு படம் பார்க்க வருவோர் இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருப்பதைத் திரையரங்குகள் உறுதிசெய்து வருகின்றன.

#சிங்கப்பூர் #திரையரங்குகள்

குறிப்புச் சொற்கள்