விவோசிட்டிக்கு அருகில் கடலில் மிதந்தது பெண்ணின் சடலம்

விவோசிட்டிக்கு அருகில் கடலில் மிதந்தது பெண்ணின் சடலம்

1 mins read
dbaf7071-e992-4094-acf6-0e7ae2afe501
விவோசிட்டிக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் கடலில் மிதந்துகொண்டிருந்தது நேற்று (மார்ச் 24) காலை கண்டுபிடிக்கப்பட்டது. படம்: ஸ்டோம்ப் -

விவோசிட்டிக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் கடலில் மிதந்துகொண்டிருந்தது நேற்று (மார்ச் 24) காலை கண்டுபிடிக்கப்பட்டது.

உடன் பணிபுரியும் ஒருவர் மூலம் அது தொடர்பான புகைப்படங்களைப் பெற்ற ஸ்டோம்ப் வாசகர், இது குறித்த தகவலை வழங்கினார்.

இதன் தொடர்பில் போலிசிடம் தொடர்புகொண்ட ஸ்டோம்பிடம், இயற்கைக்கு மாறான இந்த மரணம் குறித்து காலை 10.33 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். 1 ஹார்பர்ஃபிரன்ட் வாக்கில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த 57 வயது மாதுவின் உடல் கைப்பற்றப்பட்டதாகவும், அவர் உயிரிழந்ததாக சம்பவ இடத்திலேயே சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ததாகவும் போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவத்தின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.

#சிங்கப்பூர் #விவோசிட்டி #பெண்

குறிப்புச் சொற்கள்