ஆசிரியருக்கு கிருமித்தொற்று: ஃபெங்ஷான் ‘பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ்’ பாலர்பள்ளி 2 வாரங்களுக்கு மூடல்

‘பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ்’ பாலர்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் (மார்ச் 23) உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அந்தப் பள்ளி இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் சிலருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில் அதன் மாணவர்களும் ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்படுவர் என்று கூறப்பட்டது.

புளோக் 126 ஃபெங்ஷான் பகுதியில் அமைந்துள்ள அந்தப் பாலர்பள்ளி, துப்புரவு மற்றும் கிருமியை நீக்கும் பணிகளுக்காக நேற்று மூடப்பட்டதாக ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் மின்னஞ்சல் மூலம் பெற்றோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆனால், பள்ளியின் சில ஆசிரியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது நேற்று (மார்ச் 24) இரவு, அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அதனையடுத்து, அந்தப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களுக்கும் தடைகாப்பு ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் பள்ளி தற்காலிகமாக மார்ச் 24 முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் ECDA ஆணையிட்டுள்ளது. தொடர்பிலிருந்தோரைக் கண்டறியும் பணிகள் தொடர்கின்றன.

அந்தப் பள்ளி கிருமி நாசினி கொண்டு முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்டதாகவும், அதன் ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரின் உடல்நலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆசிரியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் சுகாதார அமைச்சு ஈடுபட்டு வருகிறது.

‘நர்சரி இரண்டு’ வகுப்பு ஆசிரியரான அவர், கடந்த வாரம் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை விடுப்பில் சென்றார் என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சில வேலைகளை முடிப்பதற்காக கடந்த புதன்கிழமை அவர் பாலர்பள்ளிக்கு வந்தார் என்றும் அப்போது அவரது உடல்நலம் நன்றாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலர்பள்ளிக்கு கடைசியாக அவர் வந்தது கடந்த புதன்கிழமைதான்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அவருக்கு அறிகுறிகள் தென்படவே மருத்துவரிடம் சென்றார்.

அறிகுறிகள் தென்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக அந்த ஆசிரியர் பாலர்பள்ளிக்கு வந்திருந்ததால், பள்ளியை 14 நாட்களுக்கு மூடவேண்டிய அவசியம் இல்லை என்று ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியத்தின் தலைமை உரிமம் வழங்கும் அதிகாரி ஜேமி ஆங் கூறினார்.

பாலர்பள்ளியில் சில வேலைகளை முடிப்பதற்காக கடந்த புதன்கிழமை அங்கு வந்த அந்த ஆசிரியர், பிள்ளைகளுக்கு அன்று வகுப்பு நடத்தவில்லை என்று பிசிஎஃப் பாலர்பள்ளி நிர்வாகப் பிரிவின் தலைமை இயக்குநர் மரினி காமிஸ் சொன்னார்.

கடந்த புதன்கிழமை அந்த ஆசிரியர் பாலர்பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு அவருக்கு உடல் வெப்பநிலைப் பரிசோதனை உள்ளிட்ட தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


#சிங்கப்பூர் #பாலர் பள்ளி #கொவிட்-19

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!