தனக்கே பேரன், பேத்திகள் இருக்கும் நிலையில், தன் மகளுடைய அண்டை வீட்டில் உள்ள ஒரு சிறுமியைப் பலமுறை மானபங்கம் செய்த குற்றத்திற்காக 69 வயதான தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்கள் மற்றும் 12 வாரங்களைச் சிறையில் கழிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் அந்தச் சிறுமியிடம் அந்தத் தாத்தா தன் வேலைகளைக் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அந்தச் சிறுமிக்கு 10-11 வயது.
தன் மகளின் வீட்டில் வைத்தும் தன் வீட்டில் வைத்தும் அச்சிறுமியை அந்த ஆடவர் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப் பட்ட சிறுமி, எப்படி உதவுகோருவது எனத் தெரியாமல் தவித்தார்.
தனக்கு நேர்ந்த துன்பத்தைச் சொன்னால் தன் தாயே நம்புவாரோ எனவும் அவர் அஞ்சினார்.
ஏதோ காரணத்திற்காக பெற்றோர் இருவரும் சிறை சென்றபின் 2017ல் சமூக ஊழியர் ஒருவரிடம் தான் சந்தித்து வரும் கொடுமைகளை அவர் கூற, அந்த ஊழியர் அச்சிறுமியுடன் சென்று போலிசில் புகார் அளித்தார்.
#சிங்கப்பூர் #குற்றம்


