கழிவறைத் தாள், மெல்லிழைத் தாள் போன்ற காகிதப் பொருட்கள் ஒருவருக்கு இரு கட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிக் குழுமம் அறிவித்துள்ளது. முன்னர் இந்த வரம்பு நான்காக இருந்தது.
அதேபோல, உணவுப்பொருள் அடைக்கப்பட்ட கலன்கள், சமையல் எண்ணெய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி என மேலும் சில பொருட்களும் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளன.
முன்னதாக, இப்பொருட்களை இதுநாள் வரை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்க முடியும் என்ற நிலை இருந்தது.
உடனடி நூடல்ஸ், அரிசி, முட்டை, புதிய இறைச்சி, காய்கறிகள் ஆகியவற்றுக்கான வரம்பில் மாற்றமில்லை.
பொருள் வாங்க வருவோரின் எண்ணிக்கையும் அவர்கள் வாங்கும் பொருட்களின் அளவும் அதிகரித்ததைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு வரம்புகளில் ஃபேர்பிரைஸ் மாற்றங்களை அறிவித்துள்ளது.
"விநியோகம் பெரும்பாலும் சீராக இருப்பதால் உணவுப்பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன," என்றும் அந்த அறிக்கை கூறியது.
தீவு முழுவதுமுள்ள 200க்கு மேற்பட்ட ஃபேர்பிரைஸ் கடைகளில் இந்தக் கொள்முதல் வரம்புகள் நடப்பில் இருக்கும்.
நிலைமை வேகமாக மாறி வருவதால் பொருட்களை வாங்குவதற்கான கட்டுப்பாட்டு வரம்புகளிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படலாம் என்றார் ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியன் பெங்.
தொடர்புடைய செய்திகள்
#சிங்கப்பூர் #NTUC #Fairprice


