ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு இரட்டிப்பு: 940,000 குடும்பங்களுக்குப் பலன்

ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு இரட்டிப்பு: 940,000 குடும்பங்களுக்குப் பலன்

1 mins read
9f24a2e8-3967-4086-948e-3eb0bdc50fa7
ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் கொண்ட, தகுதிபெறும் குடும்பங்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கும். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 940,000 சிங்கப்பூர்க் குடும்பங்கள், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு மூலம் 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரையிலான நிதியாண்டில் இருமடங்கு பலனைப் பெறவிருக்கின்றன.

ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் கொண்ட, தகுதிபெறும் குடும்பங்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கும். அதாவது, வழக்கமாகக் கிடைக்கும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டைப் போல இம்முறை 2.5 மடங்கு அவர்களுக்குக் கிட்டும்.

இந்த மாதத்தில், தங்களது வீட்டின் அளவைப் பொறுத்து, $300 வரை 'யு-சேவ்' பயனீட்டுக் கட்டணக் கழிவை அவர்கள் பெறுவர் என்று நிதியமைச்சு இன்று (ஏப்ரல் 2) ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அதாவது, ஓரறை மற்றும் ஈரறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு $300ம் மூவறை வீடுகளில் வசிப்போருக்கு $270ம் 'யு-சேவ்' கழிவாகக் கிடைக்கும்.

அதேபோல, 'யு-சேவ்' கழிவாக நாலறை வீடுகளில் வசிப்போர் $240ம் ஐந்தறை வீடுகளில் வசிப்போர் $210ம் பெறுவர். எக்சகியூட்டிவ் அல்லது பல தலைமுறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு $180 வழங்கப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வைத்திருப்போர் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு உதவிக்குத் தகுதிபெற மாட்டார்கள்.

இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஏப்ரல் 3) அச்சுப் பிரதியை நாடவும்!

#சிங்கப்பூர் #வீவக #ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு

குறிப்புச் சொற்கள்