கொவிட்-19: சிங்கப்பூர் தாதிமை இல்லங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

சிங்கப்பூரில் உள்ள தாதிமை இல்லங்கள் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு, ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை ஆகியவை நேற்று (ஏப்ரல் 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

இம்மாதம் 30ஆம் தேதி வரை சிங்கப்பூரில் உள்ள அனைத்து தாதிமை இல்லங்களிலும் பார்வையாளார்களுக்கு அனுமதி இல்லை.

தாம்சன் லேனில் உள்ள லீ ஆ மூய் ஓல்ட் ஏஜ் ஹோமில் 11 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கிருமித்தொற்று ஏற்பட்டவர்களில் 102 வயதான மூதாட்டி உட்பட 9 பேர் இல்லவாசிகள்.

இல்லவாசிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் இந்தத் தடை வருத்தமளிப்பதாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மைபயக்க வேண்டும் என்பதற்கு இத்தகைய வசதிக்குறைவு தேவை என்று தாதிமை இல்லங்களை நடத்துவோர் குறிப்பிட்டனர்.

ஈகான் ஹெல்த்கேர் குழுமம் தீவு முழுவதும் உள்ள அதன் 7 இல்லங்களில் பார்வையாளர்களுக்குத் தடை விதிப்பதாக நேற்று அறிவித்தது.

இல்லவாசிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார் இந்தத் தடைக்கு அதிகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அந்தக் குழுமத்தின் தலைமை நிர்வாகியும் தலைவருமான திரு ஓங் சு போ கூறினார்.

இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பு ஈகான் குழுமத்தின் இல்லவாசிகளை வாரம் ஒரு முறையாவது பார்வையிடுமாறு குடும்பத்தார் ஊக்குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!