இரண்டாவது ஊழியருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் புக்கிட் மேரா கிளை அலுவலகம் இன்று மூடப்பட்டது.
அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரையில் அலுவலகம் காலவரையின்றி மூடப்படும் என்று வீவக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
"வாடிக்கையாளர்கள் ஊழியர்களின் உடல்நலனும் பாதுகாப்புக்கும் கழகம் முன்னுரிமை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்புகொண்டவர்களை அடையாளம் காண வீவக சுகாதார அமைச்சுடன் அணுக்கமாகப் பணியாற்றுகிறது," என்று அது கூறியது.
அந்த அலுவலகத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது ஊழியர் அவர்.
ஊழியருக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பது குறித்து அது விளக்கவில்லை.
இந்த அலுவலகத்துடன் முன்பதிவு செய்துகொண்டவர்களோடு வீவக தொடர்புகொள்ளும்.
மேல் விவரங்களுக்கு InfoWEB என்ற இணையத்தளத்தில் அல்லது 1800-225-543என்ற தொலைபேசி எண்ணில் வீவகவுடன் தொடர்புகொள்ளலாம்.
#வீவக #புக்கிட் மேரா

