'கிருமித்தொற்று கண்டும் அறிகுறிகள் தென்படாதவர்களிடமிருந்து, சிங்கப்பூரில் குறைந்தது 10 பேருக்கு தொற்று பரவியது'

கொரோனா கிருமி தொற்றிய அறிகுகள் இல்லாதவர்களிடம் இருந்தே சிங்கப்பூரில் குறைந்தபட்சம் 10 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 1) வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்கள் பிரிவு இயக்குநர் இணை பேராசிரியர் வெர்னன் லீ இணைந்துகொண்டார்.

கொவிட்-19 நோயை ஏற்படுத்தும் Sars-CoV-2 எனும் கிருமியின் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பான தொற்றை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது ஒருவருக்கு நோய் குறித்த அறிகுறிகள் எதுவும் இல்லாதபோதும் அவரிமிருந்து மற்றொருவருக்கு கிருமித் தொற்றுவது பற்றியதாகும்.

இத்தகைய பரவலால் ஏற்படும் ஆபத்து தற்போதைய நிலையில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள உடல் வெப்பநிலை சோதனை போன்ற பல நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவரிடம் தென்படும் அறிகுறிகளை நம்பியுள்ளன.

சிங்கப்பூரிலுள்ள நிபுணர்களும் அதிகாரிகளும் இந்த கவலைகள் குறித்து விவாதித்துள்ளனர்.

ஜனவரி 23 முதல் மார்ச் 16 வரை சிங்கப்பூரில் பதிவான கோவிட் -19 சம்பவங்கள் ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக, ஓரிடத்தில் பலரையும் தாக்கிய தொற்றை மையமாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த காலகட்டத்தில் வெளிநாட்டிலிருந்து ஏற்படாத 157 கிருமித்தொற்று சம்பவங்களில், 10 அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னரே ஏற்பட்ட தொற்றாக இருக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த 10 பேரில் மூன்று பேர் கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட் அண்ட் லைஃப் தேவாலயம், மிஷன்ஸ் சிங்கப்பூர் தொடர்பான கிருமித்தொற்று குழுமங்களைச் சேர்ந்தவர்கள். வூஹானில் இருந்து கிருமித் தொற்றுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் இருவரும் சேவையில் பங்கேற்ற ஜனவரி 19ஆம் தேதி அன்று இவர்களும் சேவையில் கலந்து கொண்டனர். அப்போது வூஹான் சுற்றுப் பயணிகளிடம் நோய் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இந்த மூன்று சம்பவங்களில் ஒன்றான, 52 வயதான மாது, சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் முன்னர் அமர்ந்திருந்த அதே இருக்கையில் அமர்ந்துள்ளார்.

இந்த 10 சம்பவங்களில் ஒன்று சஃப்ரா ஜுரோங் கிருமித் தொற்று குழுமத்தில் இடம்பெற்றுள்ளது.

இவற்றில் ஏழில் மூன்று சம்பவங்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு ஒன்று முதல் மூன்று நாட்களுக்கு முன்பு, அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு கிருமி தொற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பான தொற்று, சுவாச துளிகளின் அல்லது மறைமுக பரவுதல் மூலம் ஏற்படக்கூடும் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது.

அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பான தொற்றுக்குப் பதிலாக, அறியப்படாத ஒருவர் மூலம் நோய் தொற்றியிருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியத்தை இந்த ஆய்வு கருத்தில்கொள்கிறது.

எனினும், சிங்கப்பூரின் “வலுவான கண்காணிப்பு முறைகளில்” இது சாத்தியமில்லை என்று ஆய்வாளர்கள் கூறினர்.

நோயாளிகள் தங்கள் அறிகுறிகள் தோன்றிய தேதியை தவறாக நினைவில் வைத்திருக்கக் கூடும் என்பதையும் ஆய்வு சுட்டியது.

இருப்பினும், கிருமி தொற்றியவருடன் தொடர்புகொண்டவர்களை அடையாளம் காணும்போது அறிகுறிகள் தோன்றுவதற்கு முந்தைய காலத்தையும் உள்ளடக்க வேண்டும் என்றும், ஆய்வுகள் மக்கள் ஒருவருடன் ஒருவர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறினார்.

ஆய்வு குறித்து கருத்துத் தெரிவித்த மவுண்ட் எலிசபெத் நோவீனா மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் லியோங் ஹோ நாம், சமூக இடைவெளி இப்போது மிக முக்கியமானது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!