4D, டோட்டோ தற்காலிக நிறுத்தம்

1 mins read
3a4d3968-48e6-4554-be53-c7132f900bdb
உள்ளூரில் கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனமும் தனது சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உள்ளூரில் கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனமும் தனது சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.

லாட்டரி குலுக்கு, நான்கு இலக்கம் மற்றும் டோட்டோ ஆகிய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

4டி எனப்படும் நான்கிலக்கக் குலுக்கல் இந்த வார இறுதியோடு நிறுத்தப்படும்.

மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிக நிறுத்தம் தொடரும்.

அதேபோல, டோட்டோ லாட்டரி குலுக்கல் நாளை திங்கட்கிழமை திட்டமிட்டபடி நடக்கும்.

அதன் பின்னர் நடைபெற வேண்டிய குலுக்கல் அத்தனையும் ரத்து செய்யப்படும்.

இதுபோன்ற பந்தயங்களுக்கு சீட்டு வாங்கியவர்கள் அதனை வைத்திருக்குமாறும் பணம் திரும்பப்பெறுவதற்கான நடைமுறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் பூல்ஸ் தெரிவித்துள்ளது.

விளையாட்டு தொடர்பான பந்தயப் பிடிப்புகளும் மறு அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்படுவதாக சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் கழகம் கூறியுள்ளது.

#சிங்கப்பூர் #4D #Toto

குறிப்புச் சொற்கள்