சிங்கப்பூரரர்களாக உள்ள பெற்றோர், வாழ்க்கைத்துணை அல்லது பிள்ளைகள் உள்ள சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் நீண்டகால வருகை 'பிளஸ்' அட்டை வைத்திருப்பவர்களும் ஒருமுறை கிடைக்கும் $300 ஒருமைப்பாட்டு வழங்கீடு பெறுவார்கள் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இன்று (ஏப்ரல் 7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 21 வயதுக்கு மேற்பட்ட அத்தகைய தகுதி பெறுவோருக்கும் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரரல்லாதவர்களைக் குடும்ப உறுப்பினர்களாகக் கொண்டுள்ள சிங்கப்பூரர்கள் குறித்து, வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ர உறுப்பினர் திருவாட்டி ஃபூ மீ ஹார் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த திரு ஹெங் இதனைத் தெரிவித்தார்.
"பராமரிப்பு மற்றும் ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு தற்போது எந்த ரொக்க வழங்கீடுகளும் கிடைப்பதில்லை.
இருப்பினும் இந்தச் சிரமமான காலகட்டத் தில் அவர்களின் குடும்பத்துக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்கும்," என்றும் கூறினார் நிதி அமைச்சருமான திரு ஹெங்.
இதற்கு விண்ணப்பிக்கும் விவரங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

