சிங்கப்பூரில் செயல்பாடுகளை நிறுத்தும்படி 10 வர்த்தகங்களுக்கு உத்தரவு

சிங்கப்பூரில் செயல்பாடுகளை நிறுத்தும்படி 10 வர்த்தகங்களுக்கு உத்தரவு

1 mins read
fd57fd7b-8f12-4897-bd9a-7597276f6243
சிங்கப்பூரில் கிருமிப் பரவலை முறியடிக்க புதிய நடைமுறை நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து எண்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தீவு முழுவதும் கிட்டத்தட்ட 10,700 வர்த்தகங்களைச் சோதித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் அத்தியாவசிய சேவைகளை வழங்காத 10 வர்த்தகங்கள் அவற்றின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிக்க நடப்புக்கு வந்துள்ள நடைமுறைகளை அவை தொடர்ந்து செயல்பட்டு வந்தன.

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் நேற்று (ஏப்ரல் 8) வெளியிட்ட கூட்டறிகையில் இதனைத் தெரிவித்தன.

மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ள அந்த வர்த்தகங்களில் பாரம்பரிய சீன மருத்துவச் சில்லறை வர்த்தகங்கள், அழகுப் பராமரிப்புப் பொருட்களை விற்கும் கடைகள், நாணய மாற்று வணிகங்கள், மின்னியல் பொருள் சில்லறை விற்பனைக் கடைகள், எழுதுபொருள் விற்கும் கடைகள் உள்ளிட்டவை அடங்கும்.

விதிமுறைகளை மீறிய வர்த்தகங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு இணங்காத வர்த்தகங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு அவற்றின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கிருமிப் பரவலை முறியடிக்க புதிய நடைமுறை நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து எண்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தீவு முழுவதும் கிட்டத்தட்ட 10,700 வர்த்தகங்களைச் சோதித்தனர்.

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, 9,750க்கும் அதிகமான உணவு, பானக் கடைகளையும் 67 கடைத்தொகுதிகளில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளையும் சோதித்தது.

பயணத்துறையுடன் தொடர்புடைய 920க்கும் அதிகமான வர்த்தகங்களை சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் சோதித்தது.

இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று இரு அமைப்புகளும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்