கொரோனா கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்போர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தச் சூழலில், அவர்களுக்காக காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார் உள்ளூர் பிரபலம் வடிவழகன்.
அதில் சிங்கப்பூருக்காக உழைத்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அவர், உதவி தேவைப்படுவோர் அழைக்கவேண்டிய தொலைபேசி எண்களைக் குறிப்பிடுவதுடன், அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளையும் பட்டியலிட்டுள்ளார்.
மேலும், கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய நடைமுறைகளையும் குறிப்பிட்டுள்ள அவர், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்த நெருக்கடி காலத்தைக் கடப்போம் என்றும் தம்முடைய பாணியில் தெரிவித்துள்ளார்.


