பொழுதைக் கழிக்க, இந்திய மரபுடைமை நிலையத்தின் கலைப்பொருள் மறுஉருவாக்கப் போட்டி

1 mins read
1f368bcc-a974-47ad-a167-801af995670f
நீங்கள் வீட்டுப்பொருட்களைக் கொண்டு கற்பனை நயத்துடன் உங்கள் கலைப்படைப்பை உருவாக்கலாம். படம்: இந்திய மரபுடைமை நிலையம் -

கொவிட் 19 நோய்ப்பரவலால் வீட்டிலேயே இருக்க வேண்டிய இந்த காலகட்டத்தில், நேரத்தை வித்தியாசமான வகையில் செலவழிக்க வாய்ப்பளிக்கிறது இந்திய மரபுடைமை நிலையம்.

உங்களது ஆர்வத்தை நீங்கள் வீட்டில் இருந்தபடியே நிறைவுசெய்ய மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

IHC கலைப்பொருள் மறுஉருவாக்கப்போட்டி:

கீழ்க்காணும் இணைப்பிலிருந்து ஏதேனும் ஒரு கலைப்படைப்பைத் தேர்தெடுத்து அதனை நீங்கள் உருவாக்கி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

நீங்கள் வீட்டுப்பொருட்களைக் கொண்டு கற்பனை நயத்துடன் உங்கள் கலைப்படைப்பை உருவாக்கலாம்.

பதிவேற்றப்படட்ட உங்கள் கலைப்படைப்பின் படத்தில் இந்திய மரபுடைமை நிலையத்தை டேக் செய்யலாம், அல்லது அவர்களது பேஸ்புக் பக்கத்திற்கு அந்தப் படை அவர்களுக்கு பேஸ்புக் வழியாக அனுப்பலாம்.

இணைப்பு: https://www.facebook. com/254479141243831/posts/ 3911487002209675/

போட்டிக்கான இறுதி நாள் ஏப்ரல் 30ஆம் தேதி. தலைசிறந்த ஐம்பது சமர்ப்பிப்புகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன.

இது தவிர ஜிக்சா விளையாட்டு, இணைய கண்காட்சி, கொவிட் 19 கிருமிப்பரவலைக் கையாள சிறந்த வழிமுறைகள் எனப் பல்வேறு அம்சங்கள் இந்தத் தளத்தில் உள்ளன. மேல் விவரங்களுக்கு இந்திய மரபுடைமை நிலையத்தின் இணையப்பத்தை நாடுங்கள்!

குறிப்புச் சொற்கள்