கொரோனா கிருமித்தொற்றை ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள பிரதமர் லீ அழைப்பு

கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்றை ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று (ஏப்ரல் 14) தெரிவித்தார்.

ஆசியான் நாடுகள் ஒன்றுக்கொன்று சார்ந்தவை என்பதால் இது அவசியம் என்றார் அவர்.

தகவல் பரிமாற்றம், வர்த்தகம் மற்றும் விநியோகப் பாதைகளைத் திறந்து வைத்திருப்பது, எதிர்கால பொருளியல் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான மீள்திறனை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் லீ கூறினார்.

அதே சமயம் ஆசியான் நாடுகள் அவற்றின் நீண்டகால இலக்குகளை மறந்துவிடக்கூடாது என்று பிரதமர் லீ வலியுறுத்தினார்.

பொருளியல் நெருக்கடிகளிலிருந்து மீண்டு வர நீண்டகால இலக்குகள் முக்கியமானவை என்று காணொளி அழைப்பு மூலம் நடத்தப்பட்ட கொவிட்-19 பற்றிய சிறப்பு ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பேசிய திரு லீ கூறினார்.

இந்த வட்டாரம் முழுவதும் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே ஆசியான் நாடுகள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றார் அவர்.

இந்த நூற்றாண்டில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக ஆபத்தான, மோசமான சுகாதார நெருக்கடிநிலை என்று கொரோனா கிருமித்தொற்றை பிரதமர் லீ வர்ணித்தார்.

நேற்று நடைபெற்ற மாநாட்டுக்கு வியட்னாமியப் பிரதமர் தலைமைதாங்கினார்.

கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார, பொருளியல், சமூக நெருக்கடிகளை ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று மாநாட்டின்போது ஆசியான் நாடுகள் தெரிவித்தன.

ஒவ்வோர் ஆசியான் நாடும் அது எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டது. கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலையை எதிர்கொள்ள எப்படியெல்லாம் ஒத்துழைக்கலாம் என்பது குறித்து மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.

எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்துகொள்ளவது முக்கியம் என்று பிரதமர் லீ வலியுறுத்தினார். ஒரு நாட்டுக்கு ஏற்புடையதாக இருக்கும் திட்டம் மற்றொரு நாட்டுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

“அவரவர் நாடுகளில் நிலவும் சூழ்நிலைகளைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும்.

“ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய விவகாரங்களில் ஒத்துழைக்க வேண்டும்,” என்றார் பிரதமர் லீ.

கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம் என்றார் அவர். பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வாட்ஸ்அப் போன்ற செயலிகள் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுவதைத் திரு லீ மேற்கோள் காட்டினார்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டோர் கண்காணிக்கப்படுவதை அவர் மற்ற ஆசியான் நாடுகளுடன் பகிர்ந்துகொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!