அரசாங்கம் அறிவித்தபடி ஒற்றுமைக்கான ரொக்க வழங்குதொகையான $600 பெரும்பாலான சிங்கப்பூரர்களின் வங்கிக் கணக்குகளில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் நடப்பில் உள்ள இந்தக் காலகட்டத்தில் கூடுதல் உதவி தேவைப்படும் பல குடும்பங்கள் இருக்கலாம் என்றும் அதனால் தங்களுக்குக் கிடைக்கும் 600 வெள்ளியை நன்கொடையாக வழங்க விரும்புகிறோம் என்றும் கூறி, பலரும் தமக்குக் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
அவர்களின் இந்தச் செயல் தம் நெஞ்சைத் தொட்டுவிட்டது எனக் குறிப்பிட்ட திரு ஹெங், இதுதான் 'சிங்கப்பூர் டுகெதர்' இயக்கத்தின் உணர்வு என்றும் சொன்னார்.
ஒற்றுமைக்கான ரொக்க வழங்குதொகையை நன்கொடையாக அளிக்க விரும்புபவர்கள், '#SGUnited' இணையவாயில் அல்லது Giving.sg இணையத்தளம் வழியாக அதைச் செய்யலாம் என்று நிதியமைச்சருமான திரு ஹெங் தெரிவித்து இருக்கிறார்.


